தொழிலதிபர் அமர்நாத் சௌத்ரி மற்றும் அவர் மனைவியும் ரூ.1 கோடிக்கான வரவோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரியான ஏ.வி.தர்ம ரெட்டியிடம் ஒப்படைத்ததாகக் கோயிலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நன்கொடை பக்தர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் பண்ணையில் வைக்கப்பட்டுள்ள பசுக்களின் நலனுக்குப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.