திருவனந்தபுரம்:
நாய் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார் டைரக்டர் விவேக்.. ஆனால், மனைவியுடன் சேர்ந்து கீழே விழுந்துவிட்டார்.. தீவிர சிகிச்சையில் இருந்த விவேக் பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவின் பிரபல டைரக்டர் ஜீத்து ஜோசப்.. இவர்தான் திரிஷ்யம், மெமரீஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
இவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் விவேக் ஆர்யன்.. இவருக்கு வயது 30 ஆகிறது.. கல்யாணமாகி அம்ருதா என்ற மனைவி உள்ளார். சென்ற வருடம் "ஓர்மையில் ஒரு சிஷ்ரம்" என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனரானார். அதேபோல, தமிழில் கூட சில குறும்படங்களை இவர் டைரக்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் போன டிசம்பர் மாதம் 22ம் தேதி, மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ரோட்டின் குறுக்கே ஒரு நாய் வந்தது.. அதனால் அந்த நாய் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார்.. இதில் நிலைதடுமாறி தம்பதி 2 பேருமே கீழே குப்புற விழுந்துவிட்டனர்.. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இவர்கள் மீட்கப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விவேக் ஆர்யனுக்கு தலையில் பலமான அடிபட்டது.. அதனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வளவு நாள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி விவேக் ஆர்யன் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் இயக்குனரின் இந்த மரணம், கேரள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.